என்ன வேண்டும் உங்களுக்கு? இடியா? புயலா?
மழையா? அல்லது பூகம்பமா?
நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து, மனிதன் தன் இனத்தை அழித்துக்
கொண்டு தான் இருக்கிறான். அப்போது போர் புரிய வில், வாள் போன்றவற்றை உபயோகித்தான். பின் தன் அறிவின் ஆற்றலைப் பயன்படுத்தி துப்பாக்கி,
பீரங்கி , ஏவுகணை என்று போர் ஆயுதங்களைப் பயன்படுத்தினான்,
அதன் உச்சம் தான் அணு குண்டு என்னும் கொடிய ஆயுதம்.
தன் அறிவின் ஆற்றலை
சிறிது சிறிதாக அழிவின் பக்கம் திருப்பிய மனிதன் "BIO WEAPON" என்று சொல்லும்
கிருமிகளை ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்தான். அதன் விளைவாக உருவானது தான் SARS,
ANTHRAX, H1N1, AIDS போன்ற கொடிய கிருமிகளும் அதனால் உருவான வியாதிகளும்.
மேலே சொன்ன அனைத்து விதமான ஆயுதங்களிலும் ஒரு ஒற்றுமை உண்டு, அது எதிரிகள் மீது இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டது
என்று தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இது அனைத்தையும் காட்டிலும் புதிய பயங்கர ஆயுதம் ஒன்று உருவாகி இருக்கிறது அது
தான் HAARP
( HIGH FREQUENCY ACTIVE AURORAL RESEARCH PROGRAM).
Bernard eastund என்ற ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு தான் இந்த HAARP, வானிலை ஆராய்ச்சியில்
ஈடுபட்டு இருந்த Bernard, சில இடங்களில் மழை அதிகம் பெய்வதும் சில இடங்களில் வறட்சி நிலவுவதும் கண்டு வருந்தி, ஏன் மழை மேகங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்ப
முடியாது என்று ஒரு வினா எழுப்பி, அதை ஆராய்ந்து எதிர்காலத்தில் ஒரு அதிபயங்கர ஆயுதமாக மாறும்
என்று உணராமல் கண்டுபிடித்ததுதான் இந்த HAARP.
இந்த மண்டலத்தில் மாறுதல்களை ஏற்படுத்தினால் இது மழை மேகங்களை ஒரு இடத்தில் இருந்து
வேறு இடத்துக்கு அனுப்பவோ அல்லது புது மேகங்களை உருவாக்கவோ முடியும்
என்று Bernard eastund கண்டுபிடித்தார்.
சரி இது நம் சதி கோட்பாட்டுக்குள் எப்படி வந்தது என்று நீங்கள் கேட்பது எனக்கு
புரியாமல் இல்லை, அதன் பதில் இதோ. இந்த HAARP என்னும் கண்டுபிடிப்பின்
சக்தியை வெகு சீக்கிரமே புரிந்து கொண்ட அமெரிக்க அரசு, இதன்
முழுக் கட்டுப்பாட்டையும் அதன் ராணுவத்தின் கட்டுக்குள் கொண்டு வந்தது. இங்கே தான்
ஆரம்பிக்கிறது முதல் சதி வேலை, நியாயமாக பார்த்தால் இந்த கண்டுபிடிப்பு வானிலை ஆராய்ச்சி மையத்தின்
கீழ் அல்லவா சென்று இருக்க வேண்டும்.? ஆனால் அமெரிக்க ராணுவம் குறிப்பாக அமெரிக்காவின்
வான்படையும் கடற்படையும் தான் மொத்த ப்ராஜெக்ட்டுக்கும் ஆன செலவை செய்கிறது. அப்போது
தான் சில சமூக ஆர்வலர்கள் இதை ஆராய அரம்பித்தனர். அவர்கள் சொல்லும் விஷயங்கள் நம்மை
அதிர வைக்கின்றன. ஒரு அருமையான மனித நேய கண்டுபிடிப்பு ஒரு அதி பயங்கர ஆயுதமாக மாறியிருக்கும்
உண்மை வெளியில் வர ஆரம்பித்தது.
கீழே உள்ள படம் தான் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள HAARP. ஆராய்ச்சி மையத்தின்
படம். இதில் 180 ஆண்டெனாக்கள் உண்டு, இது ELF என்று சொல்லப்படும் Extremely low frequency,
அதாவது மிக குறைந்த
அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியது, இதன் சக்தியை சொல்ல வேண்டும் என்றால் உலகிலேயே பெரிய வானொலி நிலையம் 50 கிலோ வாட் சக்தியை
பயன்படுத்தி அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது, ஆனால் HAARP 3.6 மில்லியன் வாட் சக்தியை
பயன்படுத்தி குறைந்த அதிர்வலைகளை அயனி மண்டலம் நோக்கி அனுப்புகிறது. அதவது 7500 மடங்கு அதிகம்.
இதன் சக்தியை ஒருமுகப் படுத்தி, எந்த ஒரு தாக்குதலையும் ஏற்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள்
கருதுகிறார்கள். யோசித்து பாருங்கள்.
வானில் பறக்கும் விமானமோ, இல்லை தாக்க வரும் ஏவுகணையோ,
இல்லை நம் உலகை சுற்றும்
செயற்கைக் கோள்களோ இந்த HAARP இன் சக்தி கொண்டு எளிதாக அழிக்கப் பட முடியும், அதுவும் தாங்கள் தாக்கப் பட்டார்கள் என்ற
செய்தி தெரியாமலே.. இது அனைத்தும் ஒரு வல்லரசு நாடு தன்னை காத்து கொள்ள எடுக்கும் ஒரு
நடவடிக்கை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அங்கு தான் அமெரிக்க அரசாங்கத்தின் சதி
வேலைகள் வெளிச்சத்திற்கு வருகிறது.
இந்தியாவில் அதுவும் நம் சென்னையில் விடாமல் 15 நாட்கள் மழை பெய்தால் எப்படி இருக்கும் என்று
நினைத்துப் பாருங்கள். நீங்கல் வருண பகவானை திட்டுவீர்களா? தமிழக அரசாங்கத்தைத் திட்டுவீர்களா? இல்லை
HAARP
தான் இதை செய்தது என்று உணர்வீர்களா? இது தான் HAARP இன் பலம். உங்கள் மேல் போர் தொடுக்கப்பட்டது என்று நீங்கள் உணரும்
முன்னே உங்களை அறியாமலே இந்தப் போர் நடக்கிறது. இதை நீங்கள் நம்ப மறுக்கலாம். ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்கும்,
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமிக்கும் இந்த HAARP தான் காரணம் என்று
அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு நிரூபிக்கப்பட்டது, என்ன அதை அமெரிக்க அரசாங்கம் தான் ஏற்க தயாராக
இல்லை. ஜப்பான் ஒரு வல்லரசு நாடு, அதை அழிக்க அமெரிக்க நினைத்திருத்தால், இயற்கை அழிவைத் தூண்டுவதைத்
தவிர வேறு வழியே அமெரிக்காவுக்கு இல்லை...
சரி இவை அனைத்தும் ஒரு மிகப் பெரிய வல்லரசு நாடு தன்னை காத்து கொள்ள ஒரு ஆயுதமாகப்
பயன்படுத்துவதில் ஒரு தவறும் இல்லை என்று இன்னும் நீங்கள் நினைக்கலாம், ஆனால் இங்கு தான் ஒரு மிக பெரிய சதி திட்டமே ஒளிந்து
கொண்டு இருக்கிறது., அது தான் இந்த HAARP கொண்டு " MIND CONTROL " என்று சொல்லப்படும்
மனோவசியம் செய்யும் ஒரு திட்டம். நம்முடைய மூளை சமிக்கைகள் HAAAP கருவி அனுப்பும் அதே
குறைந்த அதிர்வெண் அலைகளைக் கொண்டே சமிக்கை செய்கிறது. இவ்வாறு அனுப்பப் படும் குறைந்த அதிர்வெண் அலைகள் மூலம் நம்முடைய
மூளைக்கு வெளியில் இருந்து சமிக்கை செய்ய முடியும். உதாரணமாக நீங்கள் ஒருவரைத் தாக்க
வேண்டும் என்று இந்த கருவி மூலம் உங்கள் மூளைக்கு சமிக்கை செய்யலாம் அதுவும் நீங்கள்
உணராமலே. இந்த கொடிய பரீட்சையை தற்போது சில மனிதர்களிடம் பரீட்சை செய்து பார்ப்பதாக
வலை தளங்கலில் செய்திகள் வருகின்றன...
ஹ்ம்ம்ம் இன்னும் என்ன என்ன பயங்கர ஆயுதங்களை மனிதன் கண்டு பிடிப்பானோ தெரியவில்லை.
நம்முடைய அழிவு நம்முடைய கன்டுபிடிப்புகளால் தான் என்பது மட்டும் நிச்சயம்.
நான் சொன்ன விஷயங்களை நம்ப மறுக்கும் அனைவரும்,





